இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்: தேடுகிறது இந்தோனேசியா ராணுவம்

ஜகார்த்தா: இந்தியர் உள்ளிட்ட 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென மாயமாகி உள்ளது. அதை இந்தோனேசியா ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
இந்தோனேசியாவின் தெற்கு கலிமண்டன் மாகாணத்தில் உள்ளது கொடாபாரு மாவட்டம். இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்ட் இந்தோ ஏர் விமானத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கலிமண்டன் மாகாணம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
அதில் இந்தியர் ஒருவர், அமெரிக்கா, பிரேசில் நாட்டினர் என மொத்தம் 8 பேர் அதில் பயணித்தனர். வானில் பறக்கத் தொடங்கிய 8 நிமிடங்களில் ஹெலிகாப்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, மண்டேவே பகுதியில் உள்ள 27 கிமீ போர்னியோ வனப்பகுதியில் ஹெலிகாப்டரை ராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேடுதல் வேட்டையில் உள்ளூர் போலீசாரும் களம் இறங்கி உள்ளனர்.
வாசகர் கருத்து (1)
Artist - Redmond,இந்தியா
02 செப்,2025 - 14:32 Report Abuse

0
0
Reply
மேலும்
-
2 வாக்காளர் அட்டை வைத்திருப்பது குற்றம்: காங்., தலைவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
குண்டு துளைக்காத ரயிலில் சீனா சென்றடைந்தார் கிம் ஜோங் உன்
-
இந்தியா எங்களை தடுக்கிறது: அஜர்பைஜான் அபாண்டம்
-
ஜூனியர் அதிகாரியுடன் ரகசிய உறவு: நெஸ்லே தலைமை நிர்வாக அதிகாரி பணி நீக்கம்
-
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்
-
காய்ச்சல் பரவல் எதிரொலி: முகக்கவசம் அணிய அறிவுரை
Advertisement
Advertisement