8 பந்தில் 7 சிக்சர் * போலார்டு விளாசல்

தரவுபா: செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான சி.பி.எல்., 'டி-20' போட்டியில் 8 பந்தில் 7 சிக்சர் விளாசினார் போலார்டு. .
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 'டி-20' தொடர் நடக்கிறது. தரவுபாவில் நடந்த போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டிரின்பாகோ அணிக்கு முன்ரோ (17), தனது 100 வது 'டி-20' போட்டியில் பங்கேற்ற டேரன் பிராவோ (21) சற்று கைகொடுத்தனர். அடுத்து போலார்டு, கேப்டன் நிக்கோலஸ் பூரன் இணைந்தனர்.
இருவரும் ரன் மழை பொழிந்தனர். நவின் பிடைசி வீசிய 15 வது ஓவரின் கடைசி 4 பந்தில் 6, 6, 0, 6 என 3 சிக்சர் விளாசினார் போலார்டு. அடுத்து சலம்ஹெய்ல் வீசிய 16 வது ஓவரின் கடைசி 4 பந்திலும் போலார்டு சிக்சர் (8 பந்தில் 7 சிக்சர்) அடித்து, அரைசதம் கடந்தார். இவர் 29 பந்தில் 65 ரன் எடுத்தார். பூரன் தன் பங்கிற்கு 52 ரன் அடித்தார். டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவரில் 179/6 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணிக்கு ஆன்ட்ரூ பிளட்சர் (67), எவின் லீவிஸ் (42) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. மற்ற வீரர்கள் ஏமாற்ற, 20 ஓவரில் 167/6 ரன் மட்டும் எடுத்து, 12 ரன்னில் தோல்வியடைந்தது.
கெய்லுக்கு அடுத்து...
'டி-20' அரங்கில் ஒரு ஓவரில் அதிகமுறை 4 அல்லது அதற்கும் மேல் சிக்சர் அடித்த வீரர்களில் போலார்டு (10 முறை) இரண்டாவது இடத்தில் தொடர்கிறார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (13) உள்ளார்.
மேலும்
-
தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்ட ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
-
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
-
தேசிய விளையாட்டு தின போட்டிகள்
-
ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள் மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது
-
சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை
-
சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்