யு.எஸ்., ஓபன்: காலிறுதியில் சின்னர் * கோகோ காப் அதிர்ச்சி

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் சின்னர் முன்னேறினார்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர், இத்தாலியின் ஜானிக் சின்னர், 23வது இடத்திலுள்ள கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை சந்தித்தார். முதல் செட்டை 6-1 என வென்ற சின்னர், அடுத்த இரு செட்டையும் 6-1, 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
ஒரு மணி நேரம் 23 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சின்னர், 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இத்தொடரில் மூன்றாவது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லொரென்ஜோ முசெட்டி ('நம்பர்-10'), ஸ்பெயினின் முனார் ('நம்பர்-44') மோதினர். இதில் முசெட்டி 6-3, 6-0, 6-1 என எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் சின்னருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
அனிசிமோவா அபாரம்
பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-9', அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, பிரேசிலின் ஹதாக் மையாவை ('நம்பர்-20') எதிர்கொண்டார். இதில் அனிசிமோவா, 6-0, 6-3 என வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபன் தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார். போலந்தின் ஸ்வியாடெக் 6-3, 6-1 என ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
காப் 'ஷாக்'
மற்றொரு 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-3' வீராங்கனை, அமெரிக்காவின் கோகோ காப், 24வது இடத்திலுள்ள ஜப்பானின் ஒசாகா மோதினர். இதில் ஒசாகா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். கடந்த 2021க்குப் பின் முதன் முறையாக, கிராண்ட்ஸ்லாம் தொடரின் காலிறுதிக்குள் நுழைந்தார். 2024 போல, கோகோ காப் மீண்டும் 4வது சுற்றுடன் திரும்பினார்.
பெண்கள் இரட்டையர் மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ், கனடாவின் லேலா ஜோடி, 6-3, 6-4 என ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
பாம்ப்ரி ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஈகுவடாரின் எஸ்கோபர், மெக்சிகோவின் ரேய்ஸ் வரேலா ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம், 26 நிமிடம் நடந்த போட்டியில் பாம்ப்ரி ஜோடி 6-1, 7-5 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.
மேலும்
-
தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்ட ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
-
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
-
தேசிய விளையாட்டு தின போட்டிகள்
-
ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள் மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது
-
சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை
-
சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்