131 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து * தென் ஆப்ரிக்கா கலக்கல் வெற்றி

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று லீட்சில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா, பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜமை ஸ்மித், டக்கெட் (5) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. அனுபவ ஜோ ரூட் (14), லுங்கிடி பந்தில் அவுட்டானார். கேப்டன் ஹாரி புரூக் 18 பந்தில் 12 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஜமை ஸ்மித், 48 பந்தில் 54 ரன் எடுத்து முல்டர் பந்தில் அவுட்டானார்.
ஒரு கட்டத்தில் 82 ரன்னுக்கு 2 விக்கெட் என இருந்த இங்கிலாந்து அணி, பின் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது.
'சீனியர்' பட்லர் (15) நிலைக்கவில்லை. பெத்தெல் (1), வில் ஜாக்ஸ் (7) இருவரும் கேஷவ் மஹாராஜ் சுழலில் சிக்கினர். இங்கிலாந்து அணி 24.3 ஓவரில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கார்ஸ் (3) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் மஹாராஜ் 4, முல்டர் 3 விக்கெட் சாய்த்தனர். கடந்த 1975 உலக கோப்பை தொடருக்குப் பின் லீட்ஸ் மைதானத்தில் பதிவான குறைந்தபட்ச ஒருநாள் ஸ்கோர் இது ஆனது.
மார்க்ரம் அபாரம்
எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் பவுண்டரிகளாக விளாசினார். 23 பந்தில் அரைசதம் அடித்த மார்க்ரம், 86 ரன்னில் அவுட்டானர். தென் ஆப்ரிக்க அணி 20.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிக்கிள்டன் (31), பிரவிஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது.
மேலும்
-
தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்ட ரவுடிகள் உட்பட 6 பேர் கைது
-
பெங்களூரில் கனமழை மண் சரிந்து 2 தொழிலாளி பலி
-
தேசிய விளையாட்டு தின போட்டிகள்
-
ஆக்கிரமிப்பால் சுருங்கும் தெருக்கள் மெயின் பஜாரில் தினமும் நெரிசல் - கூடலுார் நகராட்சியில் நடவடிக்கை எப்போது
-
சதியால் சிக்கிய பேராசிரியர் போக்சோ வழக்கில் விடுதலை
-
சுருக்குமடி வலை தடுக்க கோரி 28 கிராம மீனவர்கள் மறியல்