பா.ஜ.,வுக்கு அதிகாரம் தான் முக்கியம்: அமைச்சர் கோபம் பா.ஜ.,வுக்கு அதிகாரம் தான் முக்கியம்: அமைச்சர் சுதாகர் கோபம்

உத்தர கன்னடா : ''மாநில வளர்ச்சியில் பா.ஜ.,வினருக்கு அக்கறை இல்லை. அதிகாரத்தில் தான் கவனம் செலுத்துகின்றனர்,'' என, அமைச்சர் டி.சுதாகர் தெரிவித்தார்.
உத்தர கன்னடா சிர்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலாவில் 14 ஆண்டுகளாக சுமத்தப்பட்டு வந்த பழியில் உண்மையை கொண்டு வரவே, எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது. இதை பா.ஜ., உட்பட அனைத்து கட்சியினரும் வரவேற்றனர். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பா.ஜ.,வுக்கு வளர்ச்சிப் பணிகள் தேவையில்லை; அதிகாரம் தான் தேவைப்படுகிறது. நான் பா.ஜ.,வில் இருந்தபோது, அதிகாரத்துக்காக, மதம் உட்பட அனைத்து விஷயத்தையும் அரசியலாக்குவர்.
பா.ஜ.,வின் இத்தகைய மன நிலைக்கு, அக்கட்சி எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரும் எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்போது தர்மஸ்தலா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்று நிரூபணமானதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மஸ்தலா விவகாரத்தில் பா.ஜ., - ம.ஜ.த.,வினர் என்ன சொன்னாலும், மாநில மக்களுக்கு உண்மை தெரியும். சிவராம் ஹெப்பார் மூத்த தலைவர். அவர் காங்கிரசில் சேருவது குறித்து அவரே முடிவெடுப்பார். காங்கிரசில் அனைத்தும் சரியாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டது எப்படி?
-
ஜிஎஸ்டி வரி குறைப்பு: நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்!
-
அமித் மிஷ்ரா ஓய்வு: 25 ஆண்டு நீண்ட பயணம்
-
ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
-
உலக விளையாட்டு செய்திகள்
-
உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்