தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு; ஒரு சவரன் ரூ.78,440!

சென்னை: சென்னையில் இன்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.78,440க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9805க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 01) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9705 ரூபாய்க்கும், சவரன் 77,640 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (செப் 02) தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9725 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 77,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (செப் 03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.78,440க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9805க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.78 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டது எப்படி?
-
ஜிஎஸ்டி வரி குறைப்பு: நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம்!
-
அமித் மிஷ்ரா ஓய்வு: 25 ஆண்டு நீண்ட பயணம்
-
ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
-
உலக விளையாட்டு செய்திகள்
-
உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்; இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்