எங்கள் மீதான கரிசனத்திற்கு நன்றி: இபிஎஸ்க்கு சொல்கிறார் திருமா!

13

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு எங்கள் மீது உள்ள கரிசனத்திற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.


திண்டிவனத்தில் கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழுந்தது குறித்து நிருபர்கள் கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கும் வன்கொடுமை, சகித்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் ஆனவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி அலுவலகத்திற்கு உள்ளே வந்து அச்சுறுத்தி இருக்கிறார். இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.



தமிழக அரசுக்கு களங்கள் விளைக்கவிக்க கூடிய அவலம் இது. ஆகவே தமிழக அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மதுரையில் பேசும் போது விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கிவிடும் என்று பேசி இருக்கிறார். விசிக எளிய மக்களுக்கான இயக்கம். விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்கான அரசியலை பேசும் இயக்கம்.


@quote@வெறும் தேர்தல் ஆதாயங்களுக்காக முடிவெடுக்க கூடிய இயக்கம் அல்ல. எனவே இந்த இயக்கத்தின் அரசியலை எவராலும் நீர்த்து போக செய்ய முடியாது. இந்த இயக்கம் ஒரு ஜாதி ஒழிப்பு இயக்கம். ஜாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு போட்டியே இல்லை. விடுதலை சிறுத்தைக் கட்சியை எந்த இயக்கத்தாலும் வீழ்த்தவோ முடியாது. quote

விழுங்கவும் முடியாது. இபிஎஸ் அரசியலுக்காக இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அவருக்கு நன்கு தெரியும். விடுதலை சிறுத்தைக் கட்சி தனித்துவம் உள்ள இயக்கம். இந்த கட்சி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருவது அவருக்கு தெரியும். ஆனாலும் அவர் அரசியல் காரணங்களுக்காக இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் என்று கருதுகிறேன். எங்கள் மீது கரிசனத்திற்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement