அரசு பஸ் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

1

கொல்லம்: கேரளாவில் அரசு பஸ் மற்றும் ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலை நோக்கி கேரள அரசு பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. எதிரே வேகமாக வந்த தார் ஜீப்பும் பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தேவலக்கரையைச் சேர்ந்த பிரின்ஸ் தாமஸ் என்பவரும், இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒச்சிறை போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement