சமையல் மாஸ்டரை கத்தியால் குத்திய நபருக்கு வலை

பாகூர்:பாகூர் அடுத்த குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானபிரகாசம் 38; தனியார் மருத்துவமனை கேண்டினில், சமையல் மாஸ்டர்.

இவர், நேற்று முன்தினம் இரவு, பெரியார் நகர் தண்ணீர் தொட்டி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக குடிபோதையில் பைக்கில் சென்ற நபர், ஞானபிரகாசத்தின் மீது உரசிய படி சென்றார்.

அதிர்ச்சியடைந்த ஞானபிரகாசம், அந்த நபரை கண்டித்தார். ஆத்திரமடைந்த அந்த நபர், ஞானபிரகாசத்தை அசிங்கமாக திட்டி, கையில் வைத்திருந்த சிறிய கத்தியால், வயிற்றில் குத்தி கிழித்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார்.

காயமடைந்த ஞானபிரகாசம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், குருவிநத்தம் புதுநகரை சேர்ந்த ரத்தினவேல் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகிறார்.

Advertisement