வாசகர்களின் பார்வையில் தினமலர்; நீங்களும் கருத்து பதிவு செய்யுங்கள் வாசகர்களே!

ஆசைகாட்டி, ஞானமூட்டிய தினமலர்
கல்லுாரி காலம் துவங்கி இன்றுவரை தினமலர் இதழை படிக்காத நாளில்லை. விவசாய கல்லுாரி மாணவனாக, சாகுபடி செய்திகளை அதிகம் வாசிப்பேன். நான் அதிகாரியாக வந்தபின்பும் விவசாயிகளுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய தகவல்களை தினமலர் கொண்டு சேர்த்தது. இயந்திர சாகுபடி குறித்து படத்துடன் செய்தி வெளியிட்டதால் விவசாயிகளிடையே பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்லுாரியில், 'விவசாயிகளுக்கு ஆசை காட்டி, ஞானமூட்டி தொழில்நுட்பத்தை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்' என்பதை தாரக மந்திரமாக சொல்வர். அதைக் குறைவின்றி செய்தது தினமலர். 'மதுரை மாவட்டத்திலும் கோதுமை விளையும்' என்ற தகவலை விவசாயிகளிடம் சேர்த்தது. விவசாயிகளுக்கு தொடர்ந்து தொண்டாற்ற வாழ்த்துகள்.
- எஸ்.கனகராஜ்
விவசாயத்துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு), மதுரை
தமிழ் போல...
தினமும் நடைபெறும் சமூக நிகழ்வுகள், அரசியல் நகர்வுகளை வாசகர்களுக்கு நேர்மையாக வழங்கி, தேசியப் பணி, மக்கள் பணியில் தன்னிகரில்லாத நாளிதழாக தினமலர் திகழ்கிறது. மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி தமிழ், அம்மொழியின் வளம் எங்கும், எப்போதும் மாறாமல் தன்னை தகவமைத்து கொள்வதில் தமிழுக்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த தமிழ் மொழிபோல் காலத்திற்கு ஏற்ப, தன்னை தகவமைத்து கொண்டு 75 ஆண்டுகால வரலாற்றை தன்னகத்தே வைத்து செய்த மக்கள் பணிகள் ஏராளம்.
- அ.முத்துக்குமார், கல்வியாளர், சின்னமனுார்
தமிழ் மக்களின் விக்கிபீடியா
செய்தித்தாள் என்றாலே தமிழக மக்களின் முதன்மை
தேர்வாக இருப்பது தினமலர் தான். மக்களின் அன்றாட நிகழ்ச்சிகளை செய்திகளாக வீட்டின் வாசல் கதவை சென்றடைகிறது. தினமலர் நாளிதழை வெறும் செய்தித்தாள் என சுருக்கிவிட முடியாது. மனித அறிவின் நீட்சியை தினசரி
நமது அறிவிற்கு எட்ட செய்கிறது. தினமலர் தமிழ் மக்களின் வீக்கிபீடியா.
- கவியரசன், வாசகர், திண்டுக்கல்
அ, ஆவன்னா படிக்க துவங்கியதிலிருந்து
எங்கள் வீட்டிற்கு வரும் தினமலர் நாளிதழை தற்போது வரை படித்துக் கொண்டிருக்கிறேன். சிறுவர் மலர் இதழை படித்து அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுதி தபாலில் அனுப்பும் பழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது. பொது தேர்வுகளுக்காக தினமலர் நடத்திய ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேர்வை நன்றாக எழுதினேன். தினமலர் நாளிதழில் கல்வி, கலை, விளையாட்டு செய்திகள் வருவதால் தொடர்ந்து படித்து வருகிறேன்.
- காவ்யா
மாணவி, மானாமதுரை
1984 முதல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி தினமலர் நாளிதழ் ஏஜன்டாக பணிபுரிகிறேன். அன்று முதல் இன்று வரை சைக்கிளில் தினமலர் நாளிதழை விநியோகித்து வருகிறேன். எனக்கும் வாசகருக்கும் நீண்ட ஒரு நட்பை ஏற்படுத்தியது தினமலர். ஏரியா பிரச்னைகள் முதல் அரசியல், அதிகாரிகள் அரசியல்வாதிகளின் முறைகேடுகளை துணிவுடன் இன்று வரை எழுதி வரும் தினமலர் நாளிதழுக்கு எல்லோரும் 'ராயல் சல்யூட்' அடிக்க வேண்டும்.
- எஸ்.சீனிவாசன்
தினமலர் ஏஜன்ட், ராமேஸ்வரம்
மாணவர்கள் நலனில் அக்கறை
காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, தினமலர் நாளிதழ் படிப்பதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளேன். அறிவியல் மலர், விவசாய மலர் பகுதிகளை ஆர்வமாக படிப்பேன். கருத்துக்களை மாணவர்களுடனும் பகிர்வேன். அரசியல், சமூகம், அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டும் டீ கடை பெஞ்ச் படிக்க படிக்க சுவராஸ்யமாக இருக்கும். அரசியல் சார்ந்த விஷயங்களை சட்டென புரியும் வகையில் கார்ட்டூன் இடம் பெறுவது அப்பகுதிக்கு சிறப்பு. தினமலர் ஆன்லைன் செய்திகளை இளைஞர்கள், மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். நம் நாட்டை தாண்டி வெளிநாடுகளில் உள்ள தமிழக இளைஞர்கள் அதிகம் வாசிக்கும் நாளிதழாக தினமலர் விளங்குகிறது.
- அருணா, பேராசிரியை, மதுரை
பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் நாளிதழ்
@quote@30 ஆண்டுகளாக தினமலர் வாசகராக இருந்து வருகிறேன். நாட்டு நடப்பு, பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வு செய்தி அதிகளவில் வெளிவருவது சிறப்பு. ஆன்மிக மலரில் வாராவாரம் வெளிவரும் கோயில்கள் பற்றிய சிறப்புகளை அறிந்து கொண்டு அங்கு சென்று வழிபடுவேன். செய்திகளை சுருக்கமாகவும், தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கும் நாளிதழாக தினமலர் விளங்குகிறது.quote
- எம்.ஜெயகாந்தி, குடும்பத்தலைவி, பரமக்குடி
11 வயதிலிருந்தே வாசகன்
நான் 11 வயதிலிருந்தே தினமலர் நாளிதழ் வாசித்து வருகிறேன். இது உங்கள் இடம், வாரமலர், சிறுவர் மலர் அதிகம் விரும்பி படிக்கிறேன். சிறுவர் மலரில் 1985 முதல் 1989 வரை வெளிவந்த உயிரை தேடி என்ற தொடரை ஒரு வாரம் கூட தவறாமல் படித்துள்ளேன். அந்த தொடர் இன்று வரை என் மனதில் பதிந்துள்ளது. ஆன்மிக மலர் புத்தகத்தில் நாம் அறிந்திராத பல அரிய தகவல்கள், நாம் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக வருகிறது. அரசியல், ஆன்மிகம், சினிமா, விளையாட்டு, உலகச் செய்திகள் என அனைத்தையும் இன்று வரை நடுநிலையுடன் வெளியிடும் நாளிதழ் தினமலர். தவறுகளை சுட்டிக் காட்டுவதில் தினமலர் நாளிதழுக்கு நிகர் தினமலர் தான்.
- எஸ்.கருப்புச்சாமி, கல்லுாரி முதல்வர், ஒட்டன்சத்திரம்
40 ஆண்டுகால பந்தம்
தினமலர் நாளிதழுக்கும் எனக்குமான பந்தம் 40 ஆண்டுகளாக தொடர்கிறது. அதிகாலையிலே வீடுகளுக்கு சென்று விடுவதால் மக்கள் வாசிக்கும் முதல் பத்திரிகையாக தினமலர் இருக்கிறது. செய்திகள், வெளியிடும் படங்கள், குக்கிராமம் வரையிலான பிரச்னைகளை பேசுவதாக மக்கள் தெரிவிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பக்தர்களுக்காவே ஆன்மிக மலர், சிறியவர்களுக்காக சிறுவர் மலர், மூத்தோரையும் கவரும் வாரமலர் என வாங்க துாண்டுகிறது.
அமராவதி
தினமலர் மூத்த ஏஜன்ட், குளத்துார்
அனைவரும் விரும்பும் தினமலர்
எங்கள் வீட்டில் நான் பிறப்பதற்கு முன்பே 3 தலைமுறையாக தினமலர் வாங்குகின்றனர். காலையில் வாசலில் கோலமிட்டு தினமலர் படித்தால் தான் மனநிறைவு. சுதந்திரதினம், குடியரசு தினத்தன்று 'தினமலர்' எழுத்தினை தேசியக்கொடி கலரில் அச்சிடுவது எனக்கு பிடிக்கும். மாணவர்கள் மட்டுமல்ல அனைவரது அறிவையும் தினமலர் 'பட்டம்' மெருகேற்றுகிறது. தினமலர் நாளிதழ் அனைவரும் விரும்பும் 'ராஜகோபுரம்'
எம்.ஜனனி, குடும்பத்தலைவி, பெரியகுளம்
55 ஆண்டுகளாக தினமலர் குடும்பத்தில் அங்கம்
1970 முதல் 55 ஆண்டுகளாக தினமலர் குடும்பத்தில் அங்கமாக 2 தலைமுறையாக ஏஜன்டாக நாளிதழ் விற்பனை செய்கிறோம். ஒரே குடும்பத்தில், ஒரே நாளிதழில் 55 ஆண்டு இருந்து பொருளாதாரத்தில் நாங்கள் அந்தஸ்து பெற்று இருப்பதே தினமலர் நாளிதழின் தரம், விற்பனை வளர்ச்சியை எதிரொலிக்கும். தினமலர் உரிமையாளர்கள் ஏஜன்ட் குடும்பங்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவிப்பதே இதற்கு காரணம். அதிகாலை 4:00 மணிக்கு கட்டுகளை பிரித்து தினமலர் பெயரையும், தலைப்பையும் பார்த்தாலே முகம் மலரும்.
தெய்வசிகாமணி, ஏஜன்ட், தேவகோட்டை
தமிழ் சமூகத்திற்கு ஒளி விளக்கு
மொழி, பண்பாடு, சமூக உணர்வு, கல்வியை குறிக்கோளாகக் கொண்டு 75 ஆண்டுகளாக மக்கள் மனதில் பிடித்து வரும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள். தினமலர், இளைஞர்களை ஊக்குவிக்கும் கல்வி மலர், மாணவர்களுக்கு போட்டித் தேர்வு தயாரிப்பு, விவசாயம் என பல துறைகளிலும் மக்களுக்கு துணை நிற்கிறது. எதிர்காலத்தில் புதிய உயரங்களை தொட்டு தமிழ் சமூகத்திற்கு ஒளி விளக்காக விளங்க வேண்டும்.
செ. சத்தியன், கல்வியாளர், காரைக்குடி
எங்கள் வீட்டின் அங்கம்
எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக 'தினமலர்' வாசகர்களாக உள்ளோம். 'தினமலர்' படிப்பதன் மூலம் உள்ளூர், உலக செய்தி வரை தெரிந்து கொள்ள முடிகிறது. எளிய தமிழில் உள்ளதால் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள முடிகிறது. குற்றம், தவறு நடந்தால் பாரபட்சமில்லாமல் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. நம்பிக்கை, நாணயம் அடிப்படையில் உண்மை செய்திகள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்துடன் அதன் நிர்வாகம் செயல்படுகிறது. 'தினமலர்' நாளிதழ் எங்கள் வீட்டின் ஓர் அங்கம்
- கிருஷ்ணவேணி, மூத்த வழக்கறிஞர், மதுரை
@block_P@உடனுக்குடன் அப்டேட் நான் சிறுவயதில் இருந்து ஆன்மிக மலர், சிறுவர் மலர், வாரமலர் விரும்பி படித்து வருகிறேன். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விரும்பி படிக்கக்கூடிய பொது அறிவு மிக்க பட்டம் இதழையும் வாசிக்கிறேன். டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கு தினமலர் படிப்பது பயன் தரும். அரசியல் சார்ந்த விஷயங்களில் உடனுக்குடன் நம்மை அப்டேட் செய்வதற்கு எளிமையாக உள்ளது. காலையில் பத்திரிகை வாங்கி படிப்பது போன்று இதர நேரங்களில் தினமலர் சமூக வலைதள பக்கங்கள் உடனுக்குடன் தகவல்களை தருகிறது. block_P
- ஆர்.சுகன்யா, கல்லுாரி பேராசிரியர், கீழக்கரை
தினமலர் எங்கள் குடும்பத்துடன் பின்னிப் பிணைந்துள்ள நாளிதழ்.
எழுத்துப் பிழையில்லா தமிழை கற்றுக்கொடுத்தது தினமலர். ஆன்மிகம் தொடங்கி அறிவுக் களஞ்சியம் வரை நித்தம் பூக்கும் மலராக காலை கண் விழித்தவுடன் ஒரு மணிநேரம் தினமலர் வாசிப்புக்கு ஒதுக்கி விடுவோம். ஆசிரியர்கள் சங்கங்களின் நிறைகுறைகளை அரசுக்கு தெரியப்படுத்துவதில் மென்மை, கடுமை போக்கை கடைபிடிப்பது, எதையும் தெளிவாக எடுத்துக்கூறும் வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியது, தினமலர் நாளிதழ். மண் உள்ளவரை மலர் உண்டு. இந்த மலரும் உண்டு. ஆசிரியர்கள் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
- தென்கரை முத்துப்பிள்ளை
தலைவர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், மதுரை
கலைக் களஞ்சியம்
புதுமையுடன் வெளிவரும் நாளிதழ். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ப செய்தி வழங்குவதில் தனி முத்திரை பதிக்கிறது. எனது தந்தை காலத்தில் இருந்து தினமலர் வாங்குகிறோம். அவரது மறைவிற்கு பின் நான் சந்தா செலுத்துகிறேன். காலையில் எழுந்தவுடன் தினமலர் படிக்கவில்லை என்றால் அந்த நாள் முழுவதும் வெறுமையாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தினமலர் தினமும் அப்டேட் செய்வதால், அதைப் பார்த்து நானும் அப்டேட் ஆகி வருகிறேன். தினமலர் கலைக் களஞ்சியம். தமிழ் வாழ தினமலர் வளர வேண்டும்.
- வி.எல்.விக்னேஷ், கல்வி நிலைய மேலாளர், கம்பம்
அதிகாரத்தை கேள்வி கேட்கும் நாளிதழ்
வாசகர்களின் கவன ஈர்ப்பிற்காக செய்தியில் தேவையற்ற விவரிப்பும், எழுத்து நடையும்
எப்போதும் இல்லை. சினிமா, லாட்டரி, போதை வஸ்துக்கள் பற்றிய எந்த ஒரு விளம்பரத்திற்கும் வருவாய் பாதிப்பு ஏற்பட்டாலும் இடம் கொடுக்காமல் வாசகனை மனதில் வைத்து செயல்படுவது சிறப்பு. இதனால் 35 ஆண்டுகால தினமலர் வாசகர் என்பதில் பெருமை படுகிறேன்.
- சுப்பிரமணியன், நீண்ட நாள் வாசகர், ராஜபாளையம்
தேசபக்தி வளர்க்கும் நாளிதழ்
நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினமலர் நாளிதழ் வாசகராக உள்ளேன். வீட்டில் காலையில் தினமலர் படிப்பேன். கடவுள் பக்தி, தேசபக்தி தொடர்பான எதிர்மறை கருத்துக்களுக்கு சமரசம் செய்யாமல் நாட்டின் ஆன்மிகம், தேசபக்தியை விட்டுத்தராமல் நடுநிலை தவறாமல் செய்திகளை வெளியிடுவதில் தினமலர் நாளிதழுக்கு நிகர் அவர்கள் மட்டுமே.
- வேலு மனோகரன், கல்வியாளர், ராமநாதபுரம்
சமரசத்திற்கு இடமில்லாதது
எந்த விதத்திலும் சமரசத்திற்கு இடமில்லாமல் உண்மை செய்திகளை தருவதில் தினமலருக்கு நிகர் தினமலர் மட்டுமே. உள்ளூர் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை தீர்ப்பதில் தனித்துவமாக விளங்குகிறது. ஆக்கபூர்வமான செய்திகளை தருவதில் சிறந்து விளங்கும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.
-மல்லிகா, குடும்பத் தலைவி, சிவகாசி
வாசிப்பு திறனை அதிகரிக்கும்
கல்லுாரி மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் செய்திகளை வழங்குகிறது தினமலர். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வந்த போதிலும் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் அலங்கரிப்பது தினமலர் மட்டுமே. செய்திகளை, புரியும் வகையில் படத்துடன் வெளியிடுவது சிறப்பு.
-சி.அமோகா
கல்லுாரி மாணவி, கூடலுார்
மக்களின் நண்பன்
38 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் ஏஜன்டாக உள்ளேன். காலம் மாற அதற்கேற்ப வரி வடிவங்களை உருவாக்கி தனி பாணி வைத்துள்ளது தினமலர். உள்ளூர் பிரச்னை துவங்கி, சர்வதேச செய்தி வரை கொண்டு செல்வதால், மக்களின் விருப்பமான நாளிதழாக உள்ளது. மக்களின் நண்பனாய் ஒரு நாளிதழ் பாராட்டுக்குரியது.
எம்.நல்லையா, தினமலர் ஏஜன்ட், அப்பையநாயக்கன்பட்டி










மேலும்
-
கட்சியின் நலனுக்காக பேசினேன், நீக்குவார்கள் என தெரியாது: செங்கோட்டையன்
-
டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை: நயினார் நாகேந்திரன்
-
அமெரிக்க நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் பிரதமர் மோடி; அமைச்சர் ஜெய்சங்கர்
-
'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாடு : கோவையில் செப்., 8, 9ல் நடக்கிறது
-
திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி
-
10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!