பிசியோதெரபி தினத்தையொட்டி நாளை இலவச சிகிச்சை முகாம்
புதுச்சேரி: ஆர்ச்சிட் பிசியோதெரபி சிகிச்சை மையத்தில் நாளை இலவச பிசியோ தெரபி சிகிச்சை முகாம் நடக்கிறது.
முத்தியால்பேட்டை காந்தி வீதி பெருமாள் கோவில் அருகே உள்ள ஆர்ச்சிட் பிசியோதெரபி சி கிச்சை மையத்தில் நாளை 7ம் தேதி இலவச பிசியோதெரபி முகாமி ற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்னைகளுக்கு இலவச பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
முகாமில், இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும், கழுத்து, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
மேலும் அனைத்து வித எலும்பு, மூட்டு, கழுத்து, முதுகு தண்டுவட சம்பந்தமான பிரச்னைகளுக்கும் நேரில் அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம். இலவச பிசியோதெரபி முகாம் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் 95007-12391 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
நாளை இரவு முழு சந்திர கிரஹணம்: 85 நிமிடங்கள் நீடிக்கும் என அறிவிப்பு
-
ஒப்பந்த ஊழியர்கள் 14,000 பேர் ராஜினாமா: சத்தீஸ்கரில் போராட்டம்
-
வாசகர்களின் பார்வையில் தினமலர்
-
முதன்முதலாக ‛தினமலர்' நாளிதழை அச்சடித்த அச்சகரின் வாரிசு கடிதம்
-
விருதுநகரில் மிலாடி நபி தொழுகை
-
நிலம் மோசடி: சார்பதிவாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு