விருத்தாசலம் ஒன்றிய தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில், தி.மு.க., வடக்கு ஒன்றிய கிளை பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, துணை செயலாளர் அன்பழகி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பட்டி வசந்தகுமார் வரவேற்றார்.

விருத்தாசலம் சட்டசபை தொகுதி மேற்பார்வையாளர் குலோத்துங்கன் சிறப்புரையாற்றினார். அதில், 2026 தேர்தலில் விடியல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பாடுபட வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்தரராஜன், பொறியாளர் ஜெகதீஸ்வரன், கிளை செயலாளர்கள் அன்பழகன், ராமமூர்த்தி, மணிகண்டன், வீரமுத்து, கோபால், சம்பத்குமார், கார்த்திகேயன், லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதேபோல், கோமங்கலம் ஊராட்சியிலும் கிளை பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

Advertisement