நேர்மையான ஆட்சிக்கு வழிகாட்டும் 'தினமலர்' தொழிலதிபர் ரமேஷ்குமார் வாழ்த்து

கடலுார்: மக்கள் நலனில் அக்கறையோடு, ஆட்சியாளர்கள் நேர்மையான முறையில் ஆட்சி நடத்த வழிகாட்டும் நாளிதழாக தினமலர் உள்ளது என, தொழிலதிபர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, தமிழ் உணர்வோடு செயல்படும் தினமலர் நாளிதழ், உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஊழலை ஒழிப்பதில்தீவிரமாக செயல்படுகிறது. எதற்கும் அஞ்சாமல், நேர்மையாக நடுநிலையோடு செய்திகளை வெளியிடும் நாளிதழ். ஆட்சியாளர்கள் நீதி, நெறிதவறாமல் ஆட்சி நடத்த குறைகளை சுட்டிக்காட்டி, நேர்மையின் பாதையில் வழி நடத்திச்செல்கிறது.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்வகையில் நடத்தும் கோலப்போட்டி, மாணவர்களுக்கான பட்டம் நாளிதழ் போன்றவை தனித்தன்மை வாய்ந்தது.
தமிழ் செம்மொழிதகுதியை பெறுவதற்காக முக்கிய சேவையாற்றியதற்காக தினமலர் ஆசிரியர் முனைவர். இரா.கிருஷ்ணமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது, தினமலர் நாளிதழின் பணிகளுக்கு கிடைத்த சிறப்பு. தேசத்தின் வளர்ச்சியிலும், கல்விப்பணிகளிலும் அக்கறை கொண்ட தினமலர், தனது 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மென்மேலும் வளர்ந்து இன்னும் பல நுாறாண்டுகள் பயணித்து மக்கள் சேவையாற்ற வேண்டும்.
மேலும்
-
நாட்டு மாடுகளை காக்க ஆர்ப்பாட்டம்
-
மனித நேயத்தை வளர்க்கும் கல்வி அவசியம் முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
-
குப்பை தீயால் கருகும் மரங்கள்
-
அவனியாபுரம் பைபாஸ் டூ ரிங்ரோடு வரை ரோட்டை விரிவுபடுத்துங்க சார்..: விமான நிலைய ரோட்டில் நெரிசல் குறைய வாய்ப்பு
-
பாதுகாப்பின்றி பணிபுரியும் கட்டுமான தொழிலாளர்கள்
-
தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை: அண்ணாமலை