கீழணை மதகுகள் ரூ.36 கோடியில் புனரமைப்பு பணி

சென்னை:தஞ்சாவூர் கீழணை மதகுகள் புனரமைப்பு பணியை, 36 கோடி ரூபாயில் மேற்கொள்ள, நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் தாலுகாவில் உள்ள அணைக்கரையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 1836ம் ஆண்டு கீழணை கட்டப்பட்டது.

இங்கு தெற்கு, வடக்கு என இரண்டு பிரிவுகளாக, ஷட்டர்களுடன் கூடிய 80 மதகுகள் உள்ளன. மணல் போக்கிகளும் உள்ளன. கல்லணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் நீர், கீழணையில் தேங்குகிறது. இதில், 150 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும்.

இந்த நீர் வாயிலாக, கடலுார், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், 1.31 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முறையான பராமரிப்பின்மை காரணமாக, கீழணையில் ஷட்டர்கள் சேதம் அடைந்துள்ளன. இவற்றை, 36 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்க, நீர்வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

Advertisement