கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்

தேனி :தேவாரம் டி.மீனாட்சிபுரம் ஜோதிராஜா 48. இவர் ஆக.,12 அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவரை கொலை செய்தார். தேவாரம் போலீசார் ஜோதிராஜாவை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹா பிரியா, கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து தேனி மாவட்ட சிறையில் இருந்த ஜோதிராஜா மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Advertisement