டப்பாவால் தவித்த பாப்பா

திருமங்கலம்: கப்பலுாரை சேர்ந்தவர் விவேக் 30, இவரது மனைவி சாந்தி 25, இவர்களுக்கு ஒன்றரை வயது மகள் அஸ்விகா. நேற்று காலை வீட்டில் விளையாடிய அஸ்விகா, சோபாவில் இருந்த சிறிய தைல டப்பாவை எடுத்து வாயில் போட்டுள்ளார்.

அது தொண்டையில் சிக்கியதால் குழந்தை அழுதது. பெற்றோர் டப்பாவை வெளியே எடுக்க முயன்றும் முடியவில்லை. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். தலைமை டாக்டர் ராம்குமார் தலைமையில், குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் சந்தர், காது மூக்கு தொண்டை டாக்டர் கிருத்திகா, மயக்கவியல் டாக்டர் நவீன் ஆகியோர் குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த தைல டப்பாவை அகற்றினர்.

Advertisement