பங்காரு திருப்பதியில் பக்தர்கள் விடுதி திறப்பு

தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ள குட்டஹள்ளியில் பங்காரு திருப்பதி எனும் வெங்கட ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்குவதற்கும் 70 லட்சம் ரூபாய் செலவில் 4 அறைகள் கட்டப்பட்டன.

இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா திறந்து வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாச ரெட்டி, அசோக் கிருஷ்ணப்பா, லட்சுமி நாராயணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement