அவதுாறு கருத்துக்கு தடை கோரி வழக்கு

சென்னை; மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குறித்து, அவதுாறு கருத்து தெரிவிக்க, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும், 'டேக்' செய்திருந்தார்.
இந்த விவகாரத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனு குறித்து ஜாய் கிரிசில்டா பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மேலும்
-
யார் அந்த 14 எம்.பி.,க்கள்; சி.பி.ஆர்., பெற்ற கூடுதல் ஓட்டுகளால் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
-
ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது
-
சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது!
-
விஜய்க்கு அனுமதி மறுப்பா? அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்கிறார் திருமா
-
நீர்வளத்துறை உருவாக்கியது ஏன்: முதல்வருக்கு நயினார் கேள்வி
-
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்; நன்றி சொன்னார் கிரண் ரிஜிஜூ!