நேபாளத்திற்கு விமான சேவை தற்காலிக நிறுத்தம்: இண்டிகோ ஏர்லைன்ஸ்

புது டில்லி: நேபாளத்திற்கான விமான சேவையை செப்டம்பர் 12 வரை தற்காலிகமாக நிறுத்தி, இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூகவலைதள சேவை நிறுத்தத்தை எதிர்த்து நடைபெற்று வரும் வன்முறை, போராட்டங்களால், அந்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அந்த நாட்டுக்கு செல்லக்கூடிய விமான போக்குவரத்து முடங்கியுள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கை:
நேபாளத்தில் நடைபெறும் போராட்டம் காரணமாக, இந்தியாவிலிருந்து காத்மாண்டுவிற்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. காத்மாண்டுவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் செப்டம்பர் 10ம் தேதி மதியம் 12:00 மணி வரை நிறுத்தப்படும்.
உங்கள் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டால், நீங்கள் மாற்று விமானத்தைத் தேர்வு செய்யலாம் அல்லது எங்கள் வலைத்தளம் மூலம் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காத்மாண்டுவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து பயணிக்கும் பயணிகளுக்கான மறு அட்டவணைப்படுத்தல் மற்றும் ரத்துசெய்தல் ஆகியவை செப்டம்பர் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை செப்டம்பர் 9 அன்று அல்லது அதற்கு முன் செய்யப்பட்ட முன்பதிவுகளுக்குப் பொருந்தும்.
மேலும்
-
கர்நாடகாவில் சோகம்: பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு
-
மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் ரூ. 2.7 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
-
வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு
-
அங்கன்வாடியில் 500 பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் : முதல்வர்
-
வாழ்வதற்காக சாப்பிட வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் 'அட்வைஸ்'
-
மக்காச்சோளம் விதைப்பு பணி துவக்கம்