ரூ.10 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்



கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியம் செம்படமுத்துார் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், கிருஷ்ணன் வீடு முதல் சுதர்சன் வீடு வரை கழி


வுநீர் கால்வாயும், கூலியம் பஞ்., ஒம்பலக்கட்டு கிராமத்தில், மாரியப்பன் வீடு முதல் வைரப்பன் வீடு வரை, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, கிருஷ்ணகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement