நேபாள கலவரம் எதிரொலி; எல்லையில் பலத்த பாதுகாப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர கலவரத்தை அடுத்து, அந்நாட்டுடன் எல்லையை பகிரும் உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர் உள்ளிட்ட பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து, தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்டனர்.

நேற்றும் தொடர்ந்த கலவர த்தில், பிரதமர் வீடு சூறையாடப்பட்டது. நிலைமை கைமீறிப் போனதால், நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

எனினும், தொடரும் கலவரத்தால் நேபாள எல்லையில் வசிப்பவர்கள் நம் நாட்டுக்குள் ஊருவும் அபா யம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்துடன் 1,751 கி.மீ., துார எல்லையை நம் நாடு பகிர்ந்து கொள்கிறது.

இதில், வேலியிடப்படாத பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும், சாஸ்திர சீமா பால் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டுடன் எல்லையை பகிரும் உ.பி.,யின் பல்ராம்பூர் போலீஸ் எஸ்.பி., விகாஸ் குமார் கூறியதாவது:

எல்லையில் உள்ள சாஸ்திர சீமா பாலின், 22 புறக்காவல் நிலையங்களில் கூடுதல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லையில் உள்ள ஐந்து போலீஸ் ஸ்டேஷன் பகுதிக்குட்பட்ட இடங்கள், ட்ரோன்கள் எனப்படும் ஆள் இல்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக கண்காணிக்கப்படுகின்றன.

பல் ராம்பூர் பகுதிக்கு உட்பட் ட 85 கி.மீ., எல்லைப்பகுதியில் அனைத்து வீரர்களும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உஷார் நிலை யில் உள்ளனர்.

போலீசாரும், சாஸ்திர சீமா பால் வீரர்களும் கூட்டு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 'ஆப்பரேஷன் கவாச்' குழுவினர் சிறப்பாக செயல்பட்டு, எல்லை தாண்டுவதை நெருக்கமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement