பா.ஜ.-, ஆலோசனை கூட்டம்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாள் வரும், 17ல் கொண்டாடப்பட உள்ளதால், இது குறித்து, 'சேவை இரு வாரங்கள்' என்ற பெயரில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த, பா.ஜ.,வினர் உள்ளனர். இதுகுறித்து நேற்று மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ரத்த தானம், மரக்கன்றுகள், கண் சிகிச்சை முகாம், கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஒவ்வொரு கிராமத்திலும் நடத்த வேண்டும். இதனால், பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் மக்களிடம் செல்லும் என்பதால், அனைத்து நிகழ்ச்சியிலும் சிறப்பாக செய்ய வேண்டும் என, கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேலம் முருகேசன், பொதுச்செயலாளர்கள் சுமதி, முருகேசன், ராஜேந்திரன், பொருளாளர் ராணா மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்; அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
நேபாள கலவரம் எதிரொலி; எல்லையில் பலத்த பாதுகாப்பு
-
'ஆன்லைன்' சூதாட்ட மோசடி; டில்லியில் ஒன்பது பேர் கைது
-
மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
-
இனி, திருட ஏதுமில்லை என்பதால் உடல் உறுப்புகளை திருடுகிறது தி.மு.க.,; பழனிசாமி
-
ஹிமாச்சலுக்கு ரூ.1,500 கோடி; பஞ்சாபுக்கு கூடுதலாக ரூ.1,600 கோடி: வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிரதமர் அறிவிப்பு