நாயை கட்டிப்போட்டு தாக்கிய உரிமையாளரிடம் விசாரணை
ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை கிராமத்தில், முதியவர் ஒருவர், தன் வீட்டில் வளர்க்கும் நாய், அப்பகுதியில் உள்ள கோழிகள் மற்றும் ஆடுகளை கடித்து வருவதாக கூறி, வீட்டின் முன் நாயை கட்டிப்போட்டு, கட்டையால் தாக்கினார். அவருடன் சேர்ந்து மற்றொரு நபரும் நாயை கடுமையாக தாக்கினார். இதில் நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டது.
இதை அங்கிருந்த நபர் ஒருவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இக்காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தினர், அப்பகுதிக்கு சென்று, தாக்குதலுக்கு உள்ளான வளர்ப்பு நாயை மீட்டு, சிகிச்சை அளித்தனர். மேலும், நாயை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். நாயை தாக்கிய அதன் உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்; அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
நேபாள கலவரம் எதிரொலி; எல்லையில் பலத்த பாதுகாப்பு
-
'ஆன்லைன்' சூதாட்ட மோசடி; டில்லியில் ஒன்பது பேர் கைது
-
மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
-
இனி, திருட ஏதுமில்லை என்பதால் உடல் உறுப்புகளை திருடுகிறது தி.மு.க.,; பழனிசாமி
-
ஹிமாச்சலுக்கு ரூ.1,500 கோடி; பஞ்சாபுக்கு கூடுதலாக ரூ.1,600 கோடி: வெள்ள சேதங்களை பார்வையிட்ட பிரதமர் அறிவிப்பு