விழுப்புரம் - திருப்பதி ரயில் 20 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, விழுப்புரம் - திருப்பதி ரயில்களின் சேவையில், 20 நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:





காட்பாடி - திருப்பதி ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

l திருப்பதி - காட்பாடி காலை 7:35 மணி, காட்பாடி - திருப்பதி இரவு 9:10 மணி பயணியர் ரயில்கள், வரும் 12, 15, 19, 22, 26, 29 அக்., 3, 6, 10, 13, 17, 20, 24, 27, 31, நவ., 3, 7, 10, 14, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

l விழுப்புரம் - திருப்பதி அதிகாலை 5:40 மணி ரயில், வரும் 12, 15, 19, 22, 26, 29 அக்., 3, 6, 10, 13, 17, 20, 24, 27, 31, நவ., 3, 7, 10, 14, 17ம் தேதிகளில் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். திருப்பதி - விழுப்புரம் மதியம் 1:40 மணி ரயில், மேற்கண்ட நாட்களில் காட்பாடியில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement