ஆசிய ஹாக்கி: இந்தியா அபாரம்

ஹாங்சு: ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-2 என, தென் கொரியாவை வீழ்த்தியது.

சீனாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடித்த சீனா (ஏ1), தென் கொரியா (ஏ2), இந்தியா (பி1), ஜப்பான் (பி2) அணிகள் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின.
இதன் 'சூப்பர்-4' சுற்று முதல் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு வைஷ்ணவி (2வது நிமிடம்), சங்கீதா குமாரி (33), லால்ரெம்சியாமி (40), ருதுஜா (59) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். தென் கொரியா சார்பில் கிம் யு-ஜி 2 கோல் (33, 53) அடித்தார்.


இந்திய அணி, தனது 2வது போட்டியில் (செப். 11) சீனாவை சந்திக்கிறது.

Advertisement