கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 89 பேர் கோர்ட்டில் ஆஜர்
கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணையில் 89 பேர் கோர்ட்டில் நேற்று ஆஜராகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமாக உயிரிழந்தார். மாணவி இறப்பை கண்டித்து ஜூலை 17ம் தேதி நடந்த போராட்டம், கலவரமாக மாறியது.
கலவர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், பள்ளியில் பொருட்களை சூறையாடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, போலீசாரை கல்வீசி தாக்கியது உள்ளிட்ட 4 வழக்குகளை பதிவு செய்தனர். கலவரம் தொடர்பாக 916 பேர் மீது வழக்கு பதிந்து 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதில், பாதுகாப்பு பணிக்காக சேலத்தில் இருந்து வந்த அப்போதைய டி.ஐ.ஜி., அபினவ்குமார் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி தாக்கியது, போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியது தொடர்பாக 121 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு, கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்து விட்ட நிலையில், 89 பேர், நீதிபதி ரீனா முன்னிலையில் ஆஜராகினர். 31 பேர் ஆஜராகவில்லை. விசாரணை நடத்திய நீதிபதி, விசாரணையை டிச., 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும்
-
பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்று சேர முடியுமா... * இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பு * பி.சி.சி.ஐ.,க்கு கடும் எதிர்ப்பு
-
ஜோரா ஈட்டி எறிவாரா நீரஜ் சோப்ரா... * உலக தடகளத்தில் தங்கம் வெல்வாரா
-
உலக விளையாட்டு செய்திகள்
-
புரோ கபடி: பெங்களூரு அணி வெற்றி
-
மத்திய மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி பைனலில்
-
குகேஷ்-திவ்யா 'டிரா' * கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில்...