உலக விளையாட்டு செய்திகள்

துனிசியா கலக்கல்
பாசே: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிலிப்பைன்ஸ், துனிசியா அணிகள் மோதின. இதில் துனிசியா அணி 3-0 (25-13, 25-17, 25-23) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பயிற்சியாளர்கள் நீக்கம்
கராகஸ்: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் (தென் அமெரிக்கா) ஏமாற்றிய வெனிசுலா, பெரு அணிகள் பிரதான சுற்றுக்கான வாய்ப்பை இழந்தன. இதனையடுத்து இந்த அணிகளின் பயிற்சியாளர் பதவியில் இருந்து பெர்ணான்டோ பாடிஸ்டா (வெனிசுலா), ஆஸ்கார் இபனேஸ் (பெரு) நீக்கப்பட்டனர்.
அரையிறுதியில் எகிப்து
ஓரன்: அல்ஜீரியாவில் நடக்கும் ஆப்ரிக்க பெண்களுக்கான ஜூனியர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் எகிப்து, ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. இதில் எகிப்து அணி 35-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டியிலும் வென்ற எகிப்து (10 புள்ளி) அரையிறுதிக்குள் நுழைந்தது.
அமெரிக்க வீரருக்கு தடை
லாசேன்: தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து ('அனாபோலிக் ஸ்டிராய்டு') பயன்படுத்தியது உறுதியானதால், 21 வயதான அமெரிக்க தடகள வீரர் (200 மீ., ஓட்டம்) எரியோன் நைட்டனுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்க முடியாது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் வென்ற இவர், இரண்டு முறை ஒலிம்பிக்கில் பைனல் வரை சென்றார்.
எக்ஸ்டிராஸ்
* தென் கொரியாவில் நடந்த உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், 'ரிகர்வ்' பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இளம் இந்திய வீராங்கனை கதா (15 வயது), 0-6 என்ற கணக்கில் உலகின் 'நம்பர்-1' தென் கொரியாவின் லிம் சி-ஹியோனிடம் தோல்வியடைந்தார்.
* சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் 6வது இடம் பிடித்த இந்தியாவின் பவேஷ் ஷெகாவத், பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.
* சீனாவில் நடக்கும் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 'சூப்பர்-4' போட்டியில் இன்று இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி பைனலுக்கு முன்னேறலாம்.
மேலும்
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐநா தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு
-
அனுமதியின்றி கோ.சி.மணிக்கு சிலை அமைப்பு: அதிகாரி எதிர்ப்பால் இரவோடு இரவாக அகற்றம்
-
கர்நாடகாவில் சோகம்: பக்தர்கள் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழப்பு
-
மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் ரூ. 2.7 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்
-
வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு
-
அங்கன்வாடியில் 500 பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் : முதல்வர்