திருமூர்த்திமலை கோவிலை வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டு, பக்தர் கள் வெளியேற்றப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.
மலைமேல் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்கம் அருவி மற்றும் மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங் கேஸ்வரர் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல், திருமூர்த்திமலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு நேற்று காலை முதல், சுற்றுலா பயணியர், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம், தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனையடுத்து, கோவில் நடை அடைக்கப்பட்டு, உடனடியாக பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.அருவி மற்றும் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
சிக்கிம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி: 3 பேர் மாயம்
-
சார்லி கிர்க் கொலை குற்றவாளி போட்டோ வெளியீடு; சன்மானம் அறிவித்தது எப்பிஐ
-
4 ஏரிகளை மீட்டெடுக்க ரூ.1,240 கோடி திட்டம்: தீர்ப்பாயத்தில் மாநகராட்சி கமிஷனர் அறிக்கை
-
துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
-
பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை
-
வேகமாக நிரம்புகிறது சாத்தனூர் அணை; தென்பெண்ணையில் வெள்ள அபாயம்