செப்.14 முதல் மீண்டும் வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை தொடக்கம்!

ஜம்மு: வைஷ்ணோதேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, செப்.14ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முகாஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணோதேவி குகைக் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் புகழ்பெற்றது. கடந்த மாதம் 26ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணோதேவி கோவிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 34 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து கோவிலுக்குச் செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அங்கு இடைவிடாது மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக எப்போது யாத்திரை தொடங்கும் என்று தெரியாத நிலையே காணப்பட்டது.
இந்நிலையில், வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை, செப்.14ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள காலநிலையின் அடிப்படையில், செப்,14ம் தேதி முதல் வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை மீண்டும் தொடங்க இருக்கிறது. யாத்ரீகர்கள் உரிய அடையாள அட்டையை பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எந்த பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளதோ, அந்த பாதையை மட்டுமே யாத்ரீகர்கள் பயன்படுத்த வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல் எதிரொலி: சலுகை அறிவிப்பில் ரயில்வே தீவிரம்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'