கட்சி விரோத நடவடிக்கை: பிஜூ ஜனதா தள மாஜி அமைச்சர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

புவனேஸ்வர்: முன்னாள் அமைச்சர் பிரவுல்ல குமார் மல்லிக், பிஜூ ஜனதா தளத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களான பாஸ்கர் ராவ், லால் பிஹாரி ஹிமிரிக்கா ஆகியோர் 2 நாட்களுக்கு முன்னர் கட்சி பதவிகளில் இருந்து விலகினர். இவர்களின் விலகலைத் தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாகவும், அமைச்சராக இருந்தவருமான பிரவுல்ல குமார் மல்லிக் கட்சியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.
இவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்த போது, அவருக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்டவர். 2024ம் ஆண்டு தேர்தலில் அரியணையை பாஜவிடம் பிஜூ ஜனதா தளம் இழந்தது. அப்போது முதல் எதிர்க்கட்சியாக பிஜூ ஜனதாதளம் செயல்படாமல் உள்ளதாக தொடர்ந்து கூறி வந்தார்.
இந் நிலையில், கட்சியில் இருந்து பிரவுல்ல குமார் மல்லிக் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக பிஜூ ஜனதாதளம் அறிவித்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அறிக்கை விவரம் வருமாறு;
தேன்கனல் மாவட்டம், காமக்யாநகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பிரவுல்லகுமார் மல்லிக் கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பிஜூ ஜனதா தள எம்பிக்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
பின்னலாடை துறை பிரச்னைக்கு தீர்வு காணாத தி.மு.க. அரசு: பழனிசாமி குற்றச்சாட்டு
-
மருதமலையில் 184 அடி முருகன் சிலை நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு
-
ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
-
சிங்காநல்லுார் சார்--பதிவாளர் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு
-
'தி.மு.க., அரசின் அலட்சியத்தால் 100 நாள் வேலையில் குளறுபடி'
-
சித்தாபுதுார் குடியிருப்பு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு