காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் *ஹாங்காங் பாட்மின்டனில்...

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென், ஆயுஷ் முன்னேறினர்.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் பிரனாய் ('நம்பர்-34'), லக்சயா சென் ('நம்பர்-20') மோதினர். இதில் லக்சயா 15-21, 21-18, 21-10 என போராடி வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்திய இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, ஜப்பானின் நராவோகாவை 21-19, 12-21, 21-14 என வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் சக வீரர் லக்சயாவை சந்திக்க உள்ளார்.
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி 18-21, 21-15, 21-11 என தாய்லாந்தின் பக்காபொன், பியரட்சை ஜோடியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாலஸ்தீனம் இருக்காது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சால் பரபரப்பு
-
ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.720 அதிகரிப்பு
-
பத்து நிமிடம் பேசுவதையே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் பண்ணணும்; விஜய் மீது சீமான் பாய்ச்சல்
-
அமெரிக்காவில் இந்தியர் கொடூர கொலை; ஒருவர் கைது
-
என்.எல்.சி., ஊழியர் பஸ் மோதி பலி
-
விவசாய நிலத்திற்குள் புகுந்த பஸ்; திண்டிவனத்தில் பயணிகள் தப்பினர்
Advertisement
Advertisement