ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறது தமிழக அரசு

சென்னை: 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ' டெட் ' தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இந்நிலையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் எதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும்; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி இருந்தன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி ஒன்றில், ' தீர்ப்புக்கு எதிராக அச்சமடைய வேண்டாம் என அரசு சார்பில் தெரிவித்தோம். தீர்ப்பு வந்ததும் வெளிநாட்டில் இருந்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். வார்த்தையாக மட்டும் அல்லாமல் சட்ட ரீதியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியாக போராடும்,' எனக்கூறினார்.










மேலும்
-
விளம்பர மாடல் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: நடிகர் விஜய்
-
ஏஐ உதவியுடன் காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ: பாஜ கண்டனம்
-
இந்தியாவின் எழுச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா: வரி விதிப்புக்கு மோகன் பகவத் கண்டனம்
-
நாளை மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி
-
கேரளாவில் மெகா திருமண திட்டம்... ஷாக் கொடுத்த பெண்கள்!
-
நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம்: செங்கோட்டையன் பேட்டி