கேரளாவில் மெகா திருமண திட்டம்... ஷாக் கொடுத்த பெண்கள்!

18

கண்ணூர்: கேரளாவில் அரசு சார்பில் நடத்தப்படும் மெகா திருமணத்திற்கு 3000க்கும் அதிகமான ஆண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 200 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையாவூர் கிராம பஞ்சாயத்து சார்பில் பின்தங்கிய பொருளாதாரம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 'பையாவூர் மாங்கல்யம்' என்ற பெயரில் மெகா திருமண வைபவத்தை நடத்த திட்டமிடப்பட்டு, திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.


இதுவரையில் 3,000க்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 200 பெண்களே மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இந்த விகிதத்தை ஈடு செய்ய, ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.


அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்தாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement