உலக வில்வித்தை: தீபிகா குமாரி ஏமாற்றம்

குவாங்சு: உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 3வது சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி தோல்வியடைந்தார்.

தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் தனிநர் 'ரிகர்வ்' பிரிவு தகுதிச் சுற்றில் 6வது இடம் பிடித்த இந்தியாவின் தீபிகா குமாரி (677 புள்ளி), நேரடியாக 3வது சுற்றில் பங்கேற்றார். இதில் தீபிகா, இந்தோனேஷியாவின் டயானந்தா சோய்ருனிசா மோதினர். துவக்கத்தில் இருந்து ஏமாற்றிய தீபிகா 4-6 (25-27, 28-26, 27-29, 29-29, 27-27) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஆறாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தீபிகா, ஒரு முறை கூட தனிநபர் பிரிவில் பதக்கம் வென்றதில்லை.
மற்றொரு இளம் இந்திய வீராங்கனை கதா கடாகே 15, தகுதிச் சுற்றில் 666 புள்ளிகளுடன் 14வது இடம் பிடித்தார். முதலிரண்டு சுற்றில் அஜர்பெய்ஜானின் பாத்திமா ஹுசைன்லி, பிரிட்டனின் தியா ரோஜர்சை தோற்கடித்தார். மூன்றாவது சுற்றில் அசத்திய கதா 6-4 (28-26, 27-27, 28-27, 28-28, 27-28) என ஜெர்மனியின் கேத்தரினா பாயரை தோற்கடித்தார்.


மற்றொரு இந்திய வீராங்கனை அங்கிதா பகத், 3வது சுற்றில் 2-6 என தென் கொரியாவின் லிம் சிஹியோனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Advertisement