வெவ்வேறு இடங்களில் விபத்து சிறுவன் உட்பட 3 பேர் பலி

ஓசூர், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் துஷார் துபி, 21. ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 5 இரவு, ஹோண்டா சைன் பைக்கில் தொரப்பள்ளி அருகே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். ஓசூர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

* போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம், 70. நீர்வளத்துறையில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தார். நேற்று முன்தினம் யமஹா கிரக்ஸ் பைக்கில் சென்றார். காலை, 10:00 மணியளவில், ஊத்தங்கரை அடுத்த கொரப்பநாயக்கம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த ஸ்பிளண்டர் பைக் மோதி பலியானார். கல்லாவி போலீசார், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த விஷ்ணு, 21, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த சென்னசந்திரத்தை சேர்ந்த சிறுவன் சந்தோஷ், 16. இவர் கடந்த, 9ல், ஹோண்டா சைன் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 8:45 மணியளவில் குருபரப்பள்ளி சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பிக்கப்வேன் மோதி பலியானார். குருபரப்பள்ளி போலீசார் பிக்கப் டிரைவரான, சென்னசந்திரத்தை சேர்ந்த, ஹரி 35, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement