புதிதாக 14 ஷாப்பிங் மால்கள் துவக்க போரம் மால்ஸ் திட்டம்

புதுடில்லி:வரும் 2029ம் ஆண்டுக்குள், நாடு முழுதும் புதிதாக 14 ஷாப்பிங் மையங்களை திறக்க, பிரெஸ்டீஜ் குழுமத்துக்கு சொந்தமான போரம் மால்ஸ் திட்டமிட்டு உள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது அலி தெரிவித்ததாவது:

தற்போது நெக்ஸஸ் உடன் இணைந்து 8 உட்பட நாடு முழுதும் 11 ஷாப்பிங் மையங்களை இயக்கி வருகிறோம். அதனை இரு மடங்காக அதிகரிப்பதுடன், முக்கிய மெட்ரோ நகரங்களான டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் புதிய ஷாப்பிங் மையங்களை திறக்க திட்டமிட்டு உள்ளோம்.

ஆன்லைன் வணிகம் வளர்ச்சி கண்டு வரும் நிலையிலும், மிகப்பெரிய நகரங்களில், நகர்ப்புற வாடிக்கையாளர்கள் அனுபவம் மற்றும் பிராண்டுகளுக்கு செலவிடுவதால், ஷாப்பிங் மையங்களுக்கான தேவை சீராக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement