சின்னசேக்காடு அரசு பள்ளி அணிகள் மாவட்ட ஹாக்கி போட்டிக்கு தேர்வு

மணலி, மாவட்ட ஹாக்கி போட்டிக்கு, சின்னசேக்காடு அரசு பள்ளியை சேர்ந்த மூன்று அணிகள் தேர்வாகின.

தமிழக பள்ளி கல்வித்துறை, சென்னை மாவட்டம், மாதவரம் குறுவட்ட அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி, செப்., 8ல், மணலி அம்பேத்கர் விளையாட்டு திடலில் நடந்தது.

இதில், மாதவரத்தை சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று விளையாடினர். அதன்படி, 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், மணலி விவேகானந்தா பள்ளி அணியை, சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி வென்றது.

தொடர்ந்து, 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், மாதவரம், தபால் பெட்டி, செயின்ட் அனிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை, சின்னசேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி வென்றது.

அதே போல், 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், மணலி விவேகானந்தா பள்ளி அணியை, சின்ன சேக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் அணி வென்றது.

மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்றதன் மூலம், மாவட்ட அளவிலான போட்டிக்கு, இப்பள்ளி மாணவ - மாணவியர் அணிகள் தேர்வாகியுள்ளன.

மேலும், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில், மணலி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் அணிகள் பங்கேற்று, மாவட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளன.

Advertisement