குத்துச்சண்டை: அரையிறுதியில் மீனாக் ஷி

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரையிறுதிக்குள் நுழைந்தார் இந்தியாவின் மீனாக் ஷி.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மீனாக் ஷி ஹூடா, 19 வயது பிரிவு உலக சாம்பியன் ஆன இங்கிலாந்தின் அலைஸ் பாம்ப்ரேவை எதிர்கொண்டார்.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மீனாக் ஷி, 5-0 என ஒருமனதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 2023 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற லுட்சாய்ஹனியை (மங்கோலியா) சந்திக்க உள்ளார்.
இதுவரை நுபுர் ஷியோரன், பூஜா, ஜாஸ்மின், தற்போது மீனாக் ஷி என 4 வீராங்கனைகள் குறைந்தபட்ச பதக்கத்தை உறுதி செய்தனர்.
வீரர்கள் ஏமாற்றம்
ஆண்கள் 50 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜடுமனி, நடப்பு உலக சாம்பியன் கஜகஸ்தானின் சன்ஜாரை சந்தித்தார். இதில் ஜடுமானி 0-4 என வீழ்ந்தார்.
கடந்த 2013 தொடருக்குப் பின், உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் எவ்வித பதக்கமும் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்புகின்றனர்.

Advertisement