சில வரி செய்திகள்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மக்கள் குறைதீர் கூட்டம், நாளை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மண்டல குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கவுள்ளது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை, குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணம், இணைப்பு தொடர்பான பிரச்னை மற்றும் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாகவும் விளக்கம் பெறலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.--



பெண் போலீசுக்கு வளைகாப்பு

புதுவண்ணாரப்பேட்டை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவுதமி, 27 என்பவர், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலர்.

ஏழு மாத கர்ப்பிணியான கவுதமிக்கு, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், சக போலீசார் நேற்று, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். ஏழு வகை சாதம், புடவை, வளையல்கள் மற்றும் சீர்வரிசை வழங்கி சிறப்பித்தனர்.---

Advertisement