நவராத்திரி விற்பனை கண்காட்சி துவக்கம்

சென்னை,நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், நவராத்திரியையொட்டி சிறப்பு விற்பனை கண்காட்சி இன்று துவங்கி அக்., 5ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதில், மகளிர் சுய உதவி குழுவினரின் தயாரிப்பு பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

பாரம்பரிய உணவை நகர்ப்புற மக்கள் உண்டு மகிழும் வகையில், தனி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சியை காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம்; அனுமதி இலவசம்.

வார இறுதி நாட்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement