கோவிலில் சிலை உடைப்பு : பண்ருட்டி அருகே பதற்றம்  

நடுவீரப்பட்டு; கடலுார் மாவட்டம், பண்ருட்டி, பாலுார் அடுத்த பெரியநரிமேடு கிராமத்தில் ஒரே வளாகத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், மாரியம்மன் என, 3 கோவில்கள் உள்ளது. பழுமையான இக்கோவில்களை இடித்து விட்டு புதிதாக கட்ட அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் தரப்பினர் முடிவு செய்தனர்.

இதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சுந்தரம் தரப்பினர் மாரியம்மன் கோவிலில் இருந்த சிலையை வெளியே எடுத்தனர். இதற்கு செந்தில் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

இதுதொடர்பாக பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. ஆனால், மறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம் தரப்பினர் பழைய கோவிலில் இருந்த வள்ளி, தேவசேனா சமேத சுப்பரமணியர் சிலையை உடைத்து தேசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவியது.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, வேலுமணி, அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

Advertisement