மின்னல் தாக்கி பெண் பலி

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே, மின்னல் தாக்கி பெண் இறந்தார்.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் மனைவி சுந்தரி, 48. இவர் நேற்று மாலை காசி விஸ்வநாதர் கோவில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சுந்தரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement