7 பேரிடம் ரூ.3.62 லட்சம் மோசடி
புதுச்சேரி : வில்லியனுாரைச் சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசினார்.
அதில், வங்கி கணக்கின் கே.ஓய்.சி.,யை புதுப்பிக்க ஏ.டி.எம்.கார்டு விவரங்களை கேட்டுள்ளார்.
இதைநம்பிய அவர், மர்ம நபருக்கு அனைத்து விவரங்களையும் தெரிவித்தார். அதன்பின் அவரது வங்கியில் இருந்து 97 ஆயிரம் ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.
இதேபோல், கோரிமேட்டை சேர்ந்த பெண், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 165 ரூபாய் ஏமாந்தார்.
வம்புப்பட்டை சேர்ந்தவர் 57 ஆயிரத்து 100, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 35 ஆயிரம், வில்லியனுாரைச் சேர்ந்தவர் 38 ஆயிரம், முதலியார்பேட்டையை சேர்ந்த நபரிடம் 19 ஆயிரத்து 600, மற்றும் பெண் நபரிடம் இருந்து 11 ஆயிரத்து 418 என, 7 பேர் 3 லட்சத்து 62 ஆயிரம் 283 ரூபாய் இழந்துள்ளனர்.
புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!
-
பைனலில் லக்சயா சென் * ஹாங்காங் பாட்மின்டனில் அபாரம்
-
இளையராஜாவுக்கு பாராட்டு விழா; முதல்வர், நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பு
-
கடல் கண்காணிப்புக்கு மேலும் 6 பி-8ஐ ரக ரோந்து விமானங்கள்; இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்
-
பத்மநாபசுவாமி, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு!