இலங்கை அணி அசத்தல் வெற்றி: வங்கதேசம் ஏமாற்றம்

அபுதாபி: ஆசிய கோப்பை லீக் போட்டியில் அசத்திய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் ஏமாற்றம்: வங்கதேச அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நுவான் துஷாரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் தன்ஜித் ஹசன் (0) அவுட்டானார்.
துஷ்மந்தா சமீரா 'வேகத்தில்' பர்வேஸ் ஹொசைன் எமான் (0) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் லிட்டன் தாஸ், வங்கதேச அணியின் ரன் கணக்கை துவக்கினார். தவ்ஹித் ஹிரிடோய் (8) 'ரன்-அவுட்' ஆனார். ஷனகா வீசிய 6வது ஓவரில் லிட்டன் தாஸ், 3 பவுண்டரி அடிக்க 14 ரன் கிடைத்தது.
நிசங்கா அரைசதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (3) சோபிக்கவில்லை. பின் இணைந்த பதும் நிசங்கா, கமில் மிஷாரா ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய நிசங்கா, 32 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது நிசங்கா (50) அவுட்டானார். குசால் பெரேரா (9) நிலைக்கவில்லை. தன்ஜிம் ஹசன் சாகிப் பந்தை கேப்டன் அசலங்கா சிக்சருக்கு அனுப்பினார்.
இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மிஷாரா (46), அசலங்கா (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டு 'மெய்டன்'
வங்கதேச அணி 2 ஓவரின் முடிவில் 0/2 என இருந்தது. சர்வதேச 'டி-20' அரங்கில், 7வது முறையாக முதலிரண்டு ஓவர் 'மெய்டனாக' வீசப்பட்டது.
* வங்கதேச அணி முதன்முறையாக, முதலிரண்டு ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் 2 விக்கெட்டை பறிகொடுத்தது.
* இலங்கை அணி 3வது முறையாக, முதலிரண்டு ஓவரை 'விக்கெட் மெய்டனாக' வீசியது.
மேலும்
-
அரசியலமைப்பு என்ற பெயரில் வெற்றுக் கூச்சல்; ராகுல் குற்றச்சாட்டு குறித்து பாஜ விமர்சனம்
-
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆளில்லா ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு
-
ராகுல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது; தேர்தல் ஆணையம்
-
காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன: முதல்வர் ஸ்டாலின் வேதனை
-
ரூ.5000 லஞ்சம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் மின்வாரிய அதிகாரி
-
முகத்தை துடைத்ததை அரசியலாக்குவதா? இபிஎஸ் ஆவேசம்