ரூ.5000 லஞ்சம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் மின்வாரிய அதிகாரி

மதுரை: மதுரை கோவில் பாப்பாக்குடியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கணேசன் கைது செய்யப்பட்டார்.
மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் சாமுவேல் மனோகரன். இவர் டெக்ஸ்டைல் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியின் பெயரில் வீடு கட்டி வருகிறார். இவர் தனது இடத்திற்கு முன்னாடி உள்ள மின்சார இணைப்பினை மாற்ற கோரி, மின்வாரியத்தில் அப்ளே செய்து 10 மாதங்களை கடந்துவிட்டது.
இவரிடம் மின்வாரிய போர்மேன் கணேசன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாமுவேல் மனோகரன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
பின்னர் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுத்தலின் படி, ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டை கணேசனிடம் வழங்கினார். அப்போது மறைந்து இருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் கணேசனை கையும் களவுமாக கைது செய்தனர்.










மேலும்
-
புதிய முதலீடுகள் யு.ஏ.இ., - இந்தியா பேச்சு
-
தி.நகர் புதிய மேம்பால பணிகள் நிறைவு உறுதித்தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு
-
20 கோடி உயிர்களை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவ குழுமம்
-
அதிகரிக்கும் போதைப்பொருட்கள் கடத்தல் ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு: தென் மாநிலங்களில் தீவிரம்
-
சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு
-
க்ரைம் கார்னர் : தலைமறைவு குற்றவாளி கைது