காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன: முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை: ''காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது. இந்த செய்தியை மேற்கொள் காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: காசா மூச்சு திணறுகிறது. உலக நாடுகள் கவனிக்காமல் இருக்க கூடாது. காசாவில் நடப்பவை நெஞ்சை உருக்குகின்றன. காசாவில் நடக்கும் சம்பவங்களால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்.
ஒவ்வொரு வீடியோ காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. குழந்தைகளின் அழுகை, பட்டினி கிடக்கும் குழந்தைகளின் வீடியோ காட்சி, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, ஐநா விசாரணை கமிஷனின் இனப்படுகொலை அறிவிப்பு ஆகியவை எந்த மனிதனும் ஒருபோதும் பாதிக்கப்படக்கூடாத துன்பத்தைக் காட்டுகின்றன.
அப்பாவி உயிர்கள் பறிபோகும் போது மவுனமாக இருக்க கூடாது. இனிமேல் அமைதி காக்க முடியாது. ஒவ்வொருவரும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். இந்தியா உறுதியாகப் பேச வேண்டும், உலகம் ஒன்றுபட வேண்டும், இந்த பயங்கரத்தை இப்போதே முடிவுக்குக் கொண்டுவர நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












மேலும்
-
தி.நகர் புதிய மேம்பால பணிகள் நிறைவு உறுதித்தன்மை குறித்து நிபுணர்கள் ஆய்வு
-
20 கோடி உயிர்களை காப்பாற்றிய அப்பல்லோ மருத்துவ குழுமம்
-
அதிகரிக்கும் போதைப்பொருட்கள் கடத்தல் ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு: தென் மாநிலங்களில் தீவிரம்
-
சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு
-
க்ரைம் கார்னர் : தலைமறைவு குற்றவாளி கைது
-
கிரைம் கார்னர்