304 ரன் குவித்து இங்கிலாந்து சாதனை * இரண்டாவது 'டி-20' போட்டியில் இமாலய வெற்றி

மான்செஸ்டர்: 'டி-20' அரங்கில் 20 ஓவரில் 304/2 ரன் குவித்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியின் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.
சூப்பர் துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், பட்லர் இணைந்து சூப்பர் துவக்கம் தந்தனர். 5.5 ஓவரில் இங்கிலாந்து 100/0 ரன்களை எட்டியது. முதல் விக்கெட்டுக்கு 126 ரன் (7.5 ஓவர்) எடுத்த போது, 18 பந்தில் அரைசதம் அடித்த பட்லர் (30 பந்து, 83 ரன், 7X6, 8X4) அவுட்டானார்.
சால்ட் சதம்
19 பந்தில் 50 ரன்களை கடந்தார் சால்ட். இங்கிலாந்து அணி 10 ஓவரில் 166/1 ரன் விளாசியது. தொடர்ந்து விளாசிய சால்ட், 39 பந்தில் சதம் கடந்தார். 12.3 ஓவரில் ஸ்கோர் 200/1 ரன்களை எட்டியது. பெத்தெல் (26) நிலைக்கவில்லை. 20 ஓவரில் இங்கிலாந்து 304/2 ரன் குவித்தது. 141 ரன் சால்ட் (60 பந்து, 8X6, 15X4), கேப்டன் ஹாரி புரூக் (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
மார்க்ரம் ஆறுதல்
கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம் (41), ரிக்கிள்டன் (20) ஜோடி துவக்கம் தந்தது. பிரவிஸ் (4) ஏமாற்ற, ஸ்டப்ஸ் 23, பிஜோர்ன் 32 ரன் எடுத்தனர். மற்றவர்கள் கைவிட, 16.1 ஓவரில் 158 ரன்னில் ஆல் அவுட்டானது. 146 ரன்னில் இமாலய வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது அதிகம்
சர்வதேச 'டி-20' அரங்கில் இங்கிலாந்து அணி (304/2) மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதில் ஜிம்பாப்வே (344/4, எதிர்-காம்பியா, 2024), நேபாள (314/3, மங்கோலியா, 2023) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.
* இந்திய அணி (297/6, வங்கதேசம், 2024) 4வது இடத்தில் உள்ளது.
இது 'பெஸ்ட்'
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு இடையிலான 'டி-20' போட்டியில் அதிக ரன் எடுத்த அணியானது இங்கிலாந்து. நேற்று தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 20 ஓவரில் 304/2 ரன் குவித்தது.
* 'டி-20' அரங்கில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் இது ஆனது. முன்னதாக வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 267/3 ரன் (2023) எடுத்திருந்தது.
39 பந்தில்...
சர்வதேச 'டி-20'ல் அதிவேக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஆனார் பில் சால்ட் (39 பந்து). இதற்கு முன் லிவிங்ஸ்டன் (42 பந்து, 2021) இருந்தார்.
* நேற்று 141 ரன் எடுத்த பில் சால்ட், சர்வதேச 'டி-20'ல், இங்கிலாந்து அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர், என்ற தனது முந்தைய சாதனையை முந்தினார். இதற்கு முன் 2023, டிச.,ல் 119 ரன் (வெஸ்ட் இண்டீஸ்) எடுத்திருந்தார்.
* தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒரு 'டி-20' போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் பில் சால்ட்.
146 ரன்
'டி-20'ல் ரன் அடிப்படையில் தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து (146 ரன்). 'டி-20'ல் தென் ஆப்ரிக்க அணியில் மோசமான தோல்வி ஆனது.
ஒட்டுமொத்த அடிப்படையில் இந்திய அணி (168 ரன்-நியூசி., 2023, 150 ரன், இங்கிலாந்து, 2025) இருமுறை சிறந்த வெற்றி பெற்றுள்ளது.
மேலும்
-
நில அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
-
இந்தியா - ரஷ்யா உறவை நாங்கள் விரும்பவில்லை; ஐரோப்பிய யூனியன்
-
மகாவ் கிளிகள் தோளோடு
-
உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண இந்தியா தயார்; நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் மோடி
-
கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி: டிஜிபியிடம் சவுக்கு சங்கர் திடுக்கிடும் புகார்!
-
திராவிடம் குறித்து தெரியாதவர் அதிமுக தலைமை பொறுப்பில் இருக்கிறார்: இபிஎஸ் மீது முதல்வர் தாக்கு