முன்விரோத தகராறு : 6 பேர் மீது வழக்கு 

கிள்ளை : சிதம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற் பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார், வழக்குப் பதிந்தனர்.

சென்னை, விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் பாலகுமார், 50; காட்டு மன்னார்கோவில், விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். உறவினர்களான இருவருக்கும் சொத்துப்பிரச்னை காரணமாக சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி இந்த வழக்கு சம்மந்தமாக இருதரப்பும், சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த போது, தகராறு செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ராஜசேகர், பாஸ்கர், பாலகுமார் உட்பட 6 பேர் மீது கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement