கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் ஜெயந்தி உத்சவம் துவங்கியது

சென்னை; 'ப்ருஹ்ம சபா' சார்பில், ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் அவதார தினமான நேற்று , அவரது 92வது ஜெயந்தி உத்சவம், மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா அஸ்வமேதா மஹா மண்டபத்தில், நேற்று துவங்கியது.

கிருஷ்ண பிரேமி சுவாமிகள், ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். அதனால், ஒவ்வொரு ஆண்டும் இந்த நட்சத்திரத்தில், அவரது ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.

அவரது 92வது அவதார தினம், எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று மதியம் 2:00 மணிக்கு 'பிரேமிக' குரு கீர்த்தனைகளுடன், குரு பாதுகா திருமஞ்சனம்; 3:30 மணிக்கு ஸ்ரீ ராமாயண பட்டாபிஷேகம்; 4:00 மணிக்கு, 100 பக்தர்கள் சேர்ந்து, 'லட்சார்ச்சனை' பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, 5:00 மணிக்கு மேல், மும்பை ஸ்ரீனிவச பாகவதர் தலைமையிலான நகர சங்கீர்த்தனையுடன், 'பாதுகா' புறப்பாடு நடந்தது. அயோத்யா மண்டபத்தை சுற்றியுள்ள, மூர்த்தி தெரு வழியே 'பாதுகா' வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஒவ்வொரு நாளும், காலை 6:30 மணிக்கு நிகழ்ச்சி நிரல் துவங்குகிறது. காலை 7:00 மணிக்கு, ஸ்ரீமத் பாகவதம் மற்றும் வைஷ்ணவ சம்ஹித பாராயணம்; 9:00 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சிஷ்ய பிரவசனம்; 10:00 மணிக்கு, பிராசீன சம்பிரதாய நாம சங்கீர்த்தனம் மற்றும் பூஜை.

மூன்று மணிக்கு, அஷ்டாபதி மற்றும் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சதகம்; 5:00 மணிக்கு, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்; 6:00 மணிக்கு, ஸ்ரீ ஸ்ரீ அண்ணா சிஷ்ய பிரவசனம்; 7:00 மணிக்கு பக்த விஜயம், ஸ்ரீ வைஷ்ணவ சம்ஹிதா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இறுதி நாளா ன 21ம் தேதி காலை 9:00 மணிக்கு, உஞ்சவிருத்தி மற்றும் ராதாகல்யாணமும், மாலையில் விசாகா ஹரியின் சங்கீத கச்சேரியும் நடக்கிறது. அனைத்து நாளும், பக்தர்கள் பங்கேற்று சுவாமி யி ன் அனுகிரகத்தை பெறலாம்.

Advertisement