ஆலோசனை கூட்டம்

மயிலம் : மயிலம் தி.மு.க., வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தீவனுாரில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி பேசினார். தி.மு.க., அவைத் தலைவர் சேகர், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர், தேர்தல் பணி குழு உறுப்பினர்கள் கிஷோர், கமலக்கண்ணன், இளைஞரணி சம்சுதீன், கவுன்சிலர்கள் பரிதா, உமா ஞானசேகர், சாந்தகுமார், கண்ணன், கிளைச் செயலாளர் பிரபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அண்ணாதுரை 117வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைக் கழக செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், இளைஞர் அணி, மாணவரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement